Skip to main content

Posts

Showing posts from June, 2017

மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

மழையின்பெருந்துளிகளெனத்தூறியபடியிருக்கும் இந்தமுன்னிரவைச்சூழ்ந்திருக்கும் இருளைப்புகையச்செய்து காகிதத்தின்ஓரத்தில்ஒருபடமாக்கிமுடிக்கிறேன்.
படத்தினுள்ளிருந்துநானெனப்படும்ஒளியினுஷ்ணம் ரிதங்களுடன்அசையத்தொடங்குகிறது.
கழற்றியெடுக்கப்பட்டமற்றொன்றின்முகம் இனிஅணிவிக்கப்படத்தேவையில்லாதது தானென காலக்கோட்டின்மேல்தன்குறிப்பை எழுதிவைத்துவிட்டுமறைகிறது.
வலிந்துஅணிவிக்கப்பட்டமுகங்களுக்குள்ளிருந்து வீசுவதும் அதேஉஷ்ணமானஒளிதானென்றபாடலுடன் எனக்குள்ளிருந்துவெளியேறியதெருப்பாடகன் தன்தோற்கருவியைத்தட்டியபடிநடக்கிறான்
பசியேஅவனின்இசையாயிருக்கிறது
அவனின்நீண்டஅங்கியின்மேல் புழுதிக்கறையெனவும்பசியேபடிந்திருக்கிறது
இனிப்பசியினதும் புழுதியின்நிறமேஎன உச்சஸ்தாயியில்அந்தப்பாடல்முனகியபடி நீள்கிறது
அதேமுன்னிரவில்பழையபுகைப்படங்களின்இருளுக்குள்ளிருந்து ஒருகீற்றெனத்தோன்றிமறைகிறது

பசியெனப்படும் பெருஞ்சொல்

01. இருட்சுவரின்மீதெழுதப்பட்ட 
பசியெனப்படும்பெருஞ்சொல்லின்மீதேறி
இந்தநள்ளிரவுதன்தெருப்பாடலைஇசைக்கத்தொடங்குகிறது. 
நடனமாடலாம்
சத்தமாகஒருதோற்கருவியைஇசைக்கலாம்
ஒருசருகிலையைச்சுருட்டிப்புகைக்கலாம்
ஒருகாதல்கவிதையின்கீழுதட்டைமென்றபடிகாற்றில்மிதக்கலாம்
என
தனக்கெனத்தெரிந்தெடுக்கவெனபசியின்பரவசம் எதையுமேவிட்டுசென்றிருக்கவில்லையெனஏங்கி தன்மேனிமுழுக்கசாம்பல்நிறத்தைத்தீட்டிக்கொண்டதுஇரவு
02. பசியெனப்படும்பெருஞ்சொல்லை அதேநிறங்களால்மீளவும்தன்மீதுஎழுதத்துவங்குகிறதுநான்
அப்போது புத்தகஅடுக்கினுள்புழுதிபடிந்திருந்தகுட்டிப்புத்தரின்மேல் பாதிநிலவின்ஒளியெனப்படர்கிறதுபசி
பழம்புத்தகமடிப்புகளுக்குள்பசிஒரு பழுத்தமஞ்சள்நிறத்தின்வாசமெனவீசுகிறது
கடந்து

குருவிக் குஞ்சுக் கவிதை

நினைவின் இடது கழுத்தோரம்
ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது
மேகமூடிய ஒரு குளிர் காலை

உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து
நிறங்களை உதறித் துறந்தபடி
அது மெல்லச் சிறகசைக்கிறது
ஆங்காங்கே உதிர்ந்து விழும்
பிஞ்சு இறகுகள் முழுக்க
கருப்பு வெள்ளையாலான இலையுதிர்காலக் கனவொன்றின் வாசனை.

குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன்
காதோரம்
"மீட்டப்பட்ட யாழின் சந்தம்
உன் மீது படர்ந்திருக்க வந்திருக்கிறேன்"
என்றபடி
கவிதை முழுக்கத் தன் சிறகை விரித்தபடி நுழைந்து
குருவிக் குஞ்சுக் கவிதையெனத் தன்னிச்சையாகப் பெயரும் சூட்டிக் கொள்கிறது.

கவிதைக்குள் நுழையவே முடியாது போன
இந்தத் தடவை
கடைசி வரியில் கடைசிச் சொல்லென வந்தமர்ந்து
ஓய்வெடுக்கிறது
நான்.

பின்னிரவெனச் சுருண்டு நெளியும் சொல்

இன்னமும்தட்டச்சுசெய்யப்படாத விடலைப்பருவத்துக்குளிர்ச்சொற்களுக்குள் செட்டைகழற்றியகவிதைசுருண்டுபடுக்கிறது.
வெறும்ஒளியின்மங்கியவண்ணங்கள்கொண்டு பின்னிரவிலிருந்துவெளியேறியபெண் இன்னொருகவிதையைஎழுதிவைக்கிறாள்
அதுஎன்னைப்பற்றியது
சாயமற்றதன்உதடுவழி அவள்தன்பாடலைஇப்படித்தொடங்கினாள்
"...அவனொருவெள்ளைக்காகிதம் நானோமைபூசப்பட்டஒளி.."
உஷ்ணமானமெல்லியதோலிலிருந்து காதல்ஒருதூதுவன்போலஇறங்கி