Skip to main content

நின் ஒளியோவியத்துடனான பயணத்தினைக் குறித்து வைக்கிறேன்

எழுத வாய்க்கும் மொழிகள் உதிர்வதும்
முத்தத்தின் வாயில் நான்
ஒரு புத்தகத்தைப் போல திறந்து கிடப்பதுமான
நள்ளிரவின் மீது பயணம் சாத்தியமாகிறது.

தட்டுத்தடுமாறி ஜன்னலூடு விழும்
பூரணைக் கீறல்கள் பட்டு
அருகிலிருக்கும் எதுவுமேயற்ற இருக்கையில்
ஒரு கூந்தல் வரையப்படுகிறது.

அதில் இரண்டு மயிர்கள் நெளிந்து மீதிப் பெண்ணைச் செய்கின்றன.

வாசனையில் திளைத்திருக்கும் கூந்தல் கற்றை
கலைந்திருக்குமாறே ஓவியம் உறைந்தும் விடுகிறது.

இனி முத்தமிடும் பருவம்

அறிந்தேயிராத நின் வாசனையில் கிறங்கிப்
பைத்தியம் முற்றிய என் அஞ்சிறைத் தும்பி,
இலக்கியத்து வாசனைச் சொற்களத்தனையையும் விழுங்கி,
கரடு முரடான இருளில் குதித்து இறந்து போனது.

வாசனையென்பது நீயெனப் பொருள் கொண்டது இனி

என்றென்றைக்கும் முடிவுறாத நின் முத்தத்தில் களைத்து
நின் மீதே வீழ்ந்தபடியிருக்கிறது திரும்பவும் நான்.

சிலிர்ப்பில் ஓவியத்தின் மறு பக்கம் திரும்பியபடியிருக்கிறது நீயாகிய ஒளி.

நானெனப்படுவது நின் மொழி,
நானெனப்படுவது நின் முத்தம்,
நானெனப்படுவது நின் பரவசம்.


(நன்றி: ஆக்காட்டி இதழ் 04)

Comments

Popular posts from this blog

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நினைவின்மடிப்புகளுக்குள் வெள்ளைமுத்தங்களெனஎறும்பூரும் இந்தநள்ளிரவின்பெயரென்ன?
உஷ்ணமானஆயிரம்மென்சொற்களாகி கவிதைக்குள்உறைந்துபோன விரகத்தின்சுவைஎன்ன?
வேரெனப்படர்ந்திருக்கும்இந்தப்பேரழகிஇரவின் சுருள்முடிக்கற்றைகளில்கிறங்கி சொற்களைத்தவறவிடும்ஏதிலிக்கு கவிதையன்றிபோக்கிடமேது?
கேள்விகள்செய்தேதீர்ந்துபோன சொற்களிருந்தஇடைவெளிக்குள்ளிருந்து படபடக்கும்நின்காதல் வெறுங்கவிதையின்மீது
கடல்நீலநிறமெனப் படிந்துவிடுகிறது. 
கவிதையேஎன்திரை, கிரீடமும்அதுவே என

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்துபிரிந்த இந்தவெள்ளைஇரவின்ஒளி இருளிலிருந்துநம்மை வெவ்வேறுசொற்களாகப்பிரித்தெடுக்கிறது
நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என நாம்பெயர்தரித்துக்கொண்டஇரவில்
நீஎன்பதுஎப்போதும்போல பிடிக்கமுடியாதகாற்றும்
நான்எனப்படுவது கனவுகளின்இருள்சூழ்ந்ததெருக்களில் முப்பதாண்டுகளாகஅலைந்துதிரியும் கூடுதிரும்பாப்பறவையும்
ஞானமென்பது குற்றம்வழிந்தோடும் மற்றக்கண்ணும்
குற்றத்தின்காயமேபுதியஞானமும்
பசியெனப்படுவதோதன்தெருப்பாடகனின் இசைக்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01
தொக்கிநிற்கவெனஇடப்படும் மூன்றுபுள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாதகவிதையின் அர்த்தங்கள்சிதறுகின்றன
தன்பற்றியெழுதப்படாதகவிதையெனக்  கோபங்கொண்டுபிடுங்கிய தலைமயிரொன்றால் என்னைக்கட்டிவைக்கிறாள்யசோதரா
என்மார்பின்பூனைரோமங்கள் மொத்தமும் பாம்புபோலஅதனோடுஒட்டிப்பிணைந்து கொள்கின்றன
பிறகுவழக்கம்போல அவளைஅதேபெயரறியாதநாணமெனவும் நான்என்பதைபின்னாலிருந்து அணைக்கும் ராட்சதக்காற்றெனவும் இரவுபெயரிட்டுக்கொள்கிறது
மூன்றுவெவ்வேறுநிறைவுற்றபுள்ளிகள் அர்த்தங்களைமுடிவிலியெனஅறிவிக்கும் அபத்தமே கவிதையெனச்சொல்லி விடுவதினின்றும் தலைமயிரின்சுகம்இனிது