Skip to main content

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால்
குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன
உலர்ந்த அதிகாலையொன்றில்
என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை
மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை
காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்

குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும்
நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும்
கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி வெகுநேரம் நிற்கின்றன.

அதுவோ
நிலைத்திருக்கமுடியாத நானெனும் வழமைக்கு மாற்றானது

நானென்பது  கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள்
அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ;
முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள்

எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான்

ஆழமான நதியொன்றின்
அமைதியான சலனங்களையும் ஈரலிப்பையும்
ஒற்றை முத்தமென இட்டுவிடும் வரம் வாங்கி வந்த
தீராத இரவின் காதலன்

யசோதரா!
காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு
என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு

உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி
அந்திப் பொழுதுகளில்
உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறதுComments

Popular posts from this blog

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நினைவின்மடிப்புகளுக்குள் வெள்ளைமுத்தங்களெனஎறும்பூரும் இந்தநள்ளிரவின்பெயரென்ன?
உஷ்ணமானஆயிரம்மென்சொற்களாகி கவிதைக்குள்உறைந்துபோன விரகத்தின்சுவைஎன்ன?
வேரெனப்படர்ந்திருக்கும்இந்தப்பேரழகிஇரவின் சுருள்முடிக்கற்றைகளில்கிறங்கி சொற்களைத்தவறவிடும்ஏதிலிக்கு கவிதையன்றிபோக்கிடமேது?
கேள்விகள்செய்தேதீர்ந்துபோன சொற்களிருந்தஇடைவெளிக்குள்ளிருந்து படபடக்கும்நின்காதல் வெறுங்கவிதையின்மீது
கடல்நீலநிறமெனப் படிந்துவிடுகிறது. 
கவிதையேஎன்திரை, கிரீடமும்அதுவே என

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்துபிரிந்த இந்தவெள்ளைஇரவின்ஒளி இருளிலிருந்துநம்மை வெவ்வேறுசொற்களாகப்பிரித்தெடுக்கிறது
நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என நாம்பெயர்தரித்துக்கொண்டஇரவில்
நீஎன்பதுஎப்போதும்போல பிடிக்கமுடியாதகாற்றும்
நான்எனப்படுவது கனவுகளின்இருள்சூழ்ந்ததெருக்களில் முப்பதாண்டுகளாகஅலைந்துதிரியும் கூடுதிரும்பாப்பறவையும்
ஞானமென்பது குற்றம்வழிந்தோடும் மற்றக்கண்ணும்
குற்றத்தின்காயமேபுதியஞானமும்
பசியெனப்படுவதோதன்தெருப்பாடகனின் இசைக்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01
தொக்கிநிற்கவெனஇடப்படும் மூன்றுபுள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாதகவிதையின் அர்த்தங்கள்சிதறுகின்றன
தன்பற்றியெழுதப்படாதகவிதையெனக்  கோபங்கொண்டுபிடுங்கிய தலைமயிரொன்றால் என்னைக்கட்டிவைக்கிறாள்யசோதரா
என்மார்பின்பூனைரோமங்கள் மொத்தமும் பாம்புபோலஅதனோடுஒட்டிப்பிணைந்து கொள்கின்றன
பிறகுவழக்கம்போல அவளைஅதேபெயரறியாதநாணமெனவும் நான்என்பதைபின்னாலிருந்து அணைக்கும் ராட்சதக்காற்றெனவும் இரவுபெயரிட்டுக்கொள்கிறது
மூன்றுவெவ்வேறுநிறைவுற்றபுள்ளிகள் அர்த்தங்களைமுடிவிலியெனஅறிவிக்கும் அபத்தமே கவிதையெனச்சொல்லி விடுவதினின்றும் தலைமயிரின்சுகம்இனிது