Skip to main content

Posts

Showing posts from 2016
இன்னமும் தட்டச்சு செய்யப்படாத

விடலைப் பருவத்துக் குளிர்ச்சொற்களுக்குள்
செட்டை கழற்றப்பட்ட கவிதை சுருண்டு படுக்கிறது.

வெறும் ஒளியின் மங்கிய வ்ணங்கள் கொண்டு

பின்னிரவிலிருந்து வெளியேறிய பெண்

இன்னொரு கவிதையை எழுதி வைக்கிறாள்


அது என்னைப் பற்றியது


சாயமற்ற தன் உதடுவழி

அவள் தன் பாடலை இப்படித் தொடங்கினாள்


அவனொரு வெள்ளைக் காகிதம்

நான் மைபூசப்பட்ட ஒளி


உஷ்ணமான மெல்லழய தோலிலிருந்து

காதல்  ஒரு தூதுவன் போல இறங்கி வரும் என்று

ஏமாற்றப்பட்டவளின் எளிய மனசாட்சியென

நான் இன்னொருமுறை சுவரில் மோதுகிறது.


பின் முத்தம் கிடைக்கிறது


அந்த இரவு என்னைப் பெண் என்று பெரிய எழுத்துக்களால் எழுதி
உரத்து வாசித்தவண்ணம் கழிந்து போனது

Pleasure of dying in deplete as Me

Me begins to speak wearing another face of transience
The words are of moment;   mingled violence that subsequent to words, love, and calmness 
Then the Wisdom swings  little as bird out of the sense of incomprehensiblness   and must not be understood's
Me notes off its present as a wind,  that's being touched by its feathers 
Which is;  Killing of words is comfortable to feathers, 
Another wet kiss of you just started to rain heavily,   leaves the pleasure of being wordless on the great river
blood of my killed sparrow words,  mingled into the great river as an aroma  as an end
all the colours, meant to be painted my new portrait  were spread In the secret tiny fingers of this midnight.
Until depleted and died in complete,  who hugged me tightly was you,
the night wrapped with cold, dark and the love

பால்முலையை மென்றபடியிருக்கிறது பூனைச் சொல்

எதிர்கொண்டு சுமந்து செல்லப் பாரமான சொற்களை  வழிமுழுக்கத் தவற விடுகிறது கவிதை

மீதமிருக்கும்
அர்த்தங்களெனப்படும் பூனைக் குட்டிகள் கண்களை மூடிப்
பால்குடித்தவண்ணம் 
தாயின் வயிற்றைத் தடாவியபடி படுத்துக்கொள்கின்றன.

கவிதையின் பின்பாதி முழுக்க
சாம்பல் நிற நிழல்

நீண்ட வால் கொண்ட பூனையெனப்படுவதே  கவிதையென அறிவிக்கப்பட்ட  காலத்திலிருந்து  வெறுஞ்சொற்கள் வாழுமிடத்து
எனக்கென்ன வேலையெனக் கோபித்து தன்னை விடுவித்துத் தூரம் போகப் புறப்படுகிறது நான்.

விட்டு வெளியேறுதலின் இன்பமென கவிதை இருக்கிறது அப்போது

எதனை எடுத்துச் செல்வது?

ஆயிரம் பகல்களாலும் சுருட்டி முடிக்க முடியாது  அகல விரிந்து கிடக்கும் காலத்தை  எங்ஙணம் எடுத்துச் செல்வதென்றறியாது 
இரண்டு ஒளி நாட்களைத் தவறவும் விடுகிறது.

பிறகு கடுஞ் சொற்களைத் தன் மேல் எறிகிறது.

காலமோ
"எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகும் நீ எதனை எடுத்துச் செல்ல  இன்னமும் நிற்கிறாய் ஏழைக் கவிஞா"
என எக்காளத்துடன் சிரிக்கிறது.

"இன்னமும் எழுதிமுடியாத பெருங் கனவை எடுத்...." முடிய முதலே

கவிஞனற்ற ஒன்றுக்குள்ளிருந்து நான் திரும்பவும் தோற்றுப் போய் மீண்டும் அழுகிப்போன பழைய சொற்களுக்குள் விழுந்தத…

13072016 - 01:00

முத்தங்கள் நீக்கப்பட்ட சொற்கள்
சிறகடித்து வந்தமரும்
வளைந்த கிளையென ஒரு கவிதை நிகழ்கிறது.

வழமை போலவே
காற்றின் மேல் நடத்தல் எனப்படுகிற நானாகியது
இரவும் காதலும் காடேகுதலும்
மலையேறுதலுமான வினைகள் கொண்டு
தன்னை இப்படிக் குறித்து வைக்கிறது அதில்;

நானெனப்படுவது;

நீ ஒளியைப் பிடுங்கிச் சென்ற

அதே நள்ளிரவின் காட்டுக்குள்
அலையும்
கைவிடப்பட்ட பூனை இக்கணம்

அல்லது


தன்னை விடுவித்து மீட்டெடுக்கவென்று அனுப்பப்பட்ட
எழுத்தெனும் மீட்பரையும் அவர்தன் சிலுவையையும்
தானே சுமந்தபடி நடந்து
நின் மலையேறும் முனி

என்னுடைய தேவனே

நீரே எனக்கு ஒளியாயிரும்

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால்
குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன
உலர்ந்த அதிகாலையொன்றில்
என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை
மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை
காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்

குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும்
நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும்
கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி வெகுநேரம் நிற்கின்றன.

அதுவோ
நிலைத்திருக்கமுடியாத நானெனும் வழமைக்கு மாற்றானது

நானென்பது  கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள்
அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ;
முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள்

எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான்

ஆழமான நதியொன்றின்
அமைதியான சலனங்களையும் ஈரலிப்பையும்
ஒற்றை முத்தமென இட்டுவிடும் வரம் வாங்கி வந்த
தீராத இரவின் காதலன்

யசோதரா!
காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு
என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு

உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி
அந்திப் பொழுதுகளில்
உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறதுமுத்தம்

விட்டு விடுதலையாக முடியாதெனச் சபித்துத் தூக்கியெறியப்பட்ட இரண்டு வார்த்தைகளையும் ஆளுக்கொன்றாக உண்ணத் தொடங்கினோம்.

காதலி உண்டு முடித்தவுடன்
'எல்லைகளற்ற காதல்' என உரு மாறினாள்

வசந்த காலத்தின் சிறு பூக்களாலான கர்வத்தின் கோர்வையொன்று அவள் கழுத்தில் தானாகத் தோன்றியது.

கனிகளின் போதை அவள் கண்முழுக்க நிரம்பியிருக்கவும்;

காதலி ஏளனமாகப் பார்த்திருக்கவுமாக நானோ 'வாழ்வு' என உருமாறிப் போனேன்.

நீ கனிகளின் கிறக்கத்தில் உளறுகிறாய் யசோதரா!!!
நீ என்பது  பருகும்போது கீழே சொட்டிய மதுவின் ஒரு துளிதான்;


நானெனப்படுவதோ ஹூவிலிருந்து பிரிந்த முத்தம்.

பூகோவ்ஸ்கி

01.
காதலியின் மேனியை முகர்ந்திருந்த கிறக்கத்தில்
சிந்திய கவிதைகளை நான் பொறுக்கியெடுத்து முடிய
பூகோவ்ஸ்கி களைத்துப் போய் கதிரையில் வந்து விழுந்தான்.

ஒரேயிரவில் நான் அபகரித்த அவனுடைய நூற்றியாறாவது கவிதை அது.

பதிலாக எனது பாதிக் கண்கள் திறந்திருந்த புத்தனின் கவிதையினை
சுருட்டிக் கொடுத்தேன்.
ஒரே மூச்சில் அதை முழுக்கப் புகைத்து முடித்தான்.

கிரீச் கிரீச் சென்று கேட்கும் கதிரைச் சத்தத்தில்
மடியில் நிர்வாணமான காதலியைத் தடவிக் கொடுத்தபடி
அவன் திரும்பவும் அவளில் இசையைச் செய்யத்தொடங்கினான்.

"இன்னொன்றை சுருட்டித் தரட்டுமா" என்று கேட்டேன்

"ஞானம் வெறும் புகைதான்; பறந்து போய்விடும்,
இவளோ மது சுரக்கும் தேன் வதை" என்று கிறங்கிய கண்களுடன்
அவளை அணைத்தபடி உளறினான்.

அப்போது ஞானத்தின் புகை இரவு முழுக்கப் பரவியது.

02.
காலையில்
முகத் தோல் சுருங்கி, கிழவனாகி, தாடி முழுக்க நரைத்து
நான் இறந்து போயிருந்தேன்

என்னுடைய மரண ஊர்வலத்துக்கு கழுத்துப்பட்டி அணிந்து
அதே காதலியுடன் கைகோர்த்தபடி வந்திருக்கிறான் பூகோவ்ஸ்கி.

அவள் அப்போது ஆடை அணிந்திருந்தாள்.

பதறியடித்தபடி எழுந்து அறைக்கு வந்து பார்த்தே…

Me or the light from Silhouette

Unfolding the last few lines of
solitary,
written up on this midnight;

words of darkness, 
horrendous than me 
were sprinkled

ME; 
a silhouette of dark,

a  light irradiates from solitude,

or

a lust drawn depiction of 
yasodharas moist fingers,
on lonely nights of Buddha. 

Night is Playing

Night is playing,  Collaging the papers of loneliness
torn into pieces on all over my portrait.
The night is playing
ME is the face of decay;
decay is disbanded tresses of the midnight
for now

(Night does nothing but decaying the ME)

)

இரவாகுதல்

என்னை இன்னொன்றாக்கும் வித்தையை
இந்த நள்ளிரவு காட்டித்தர மறுப்பதும்,
ஒன்றாகத் தொடர்ந்திருக்கும் அவதிக்குள்
கிடந்து தவிப்பதுமாக
உழலுகிறது நானாகிய பாவம்.

ஞாபகங்களுக்குள் சிக்கியிருக்கும் மற்றொரு நானை விடுவிப்பதில்
தோற்றுப்போனதன் வார்த்தைகளை
என் மேல் எழுதிவிட்டு ஓட நினைக்கிறது அது.

வலிகளால் நிரப்பப்பட்டு இரவின் மீது உருளும்
ஞானத்தின் மட்பாத்திரம் நான்,
மாத்திரமின்றி
ஒளியை மட்டுமே கொண்ட இரவினால்
துரோகமிழைக்கப்பட்ட காதலியின் கருவிழியுந்தான்.

இரவுகளுக்கேயுரிய புதிதான இன்னொன்றாகும் மந்திரம் வசப்படாமை குறித்து
நான் உன்னிடமே முறைப்படுகிறேன்.

நீயே என் இரவுகளை மாறி மாறி வர வைக்கும் காதலி.

என்னை
இருள்வதும் பின் ஒளிர்வதுமாகிய
உன் மந்திரமறிந்த இரவாக்கிவிடு.

கனவுகளிலிருந்து விடுபட்ட ஒரு அதிகாலையின் மூன்று சம்பவங்களாக இக்கவிதை இருக்கிறது

ஒன்று:
இல்லாதிருத்தலை நட்டுவைத்து
கனவுகளின் நிழலினை அருந்தியபடி உறங்கிப் போனேன்.
பூப்பூவாக நான் பூத்திருக்கிறது காலையில்

-கனவுகளிலிருந்தே மதுவுக்கும் ஒரு முத்தத்தின் வழி போதை தொற்றியிருக்க வேண்டும்-

இரண்டு:
வெற்றிடங்களின் நிழலிலிருந்து அதேயிரவில் அனுப்பப்பட்ட இன்னொரு காதல் குறுஞ்செய்தி
எச்சிலேயற்ற இதழ்களின் ஒளிப்படத்துடன் முடிவுறுகிறது.

-ஈரமற்றது சுவையில்லாததென கனவு நிராகரிக்கிறது அதை-

மூன்று:
தூறல் மழையில் என் தோலினுஷ்ணங்கள் கரைந்து விடுமெனவஞ்சியவள்தானே நீ..!!

-எனக்கு மொழியில்லை,
நானென்பது அர்த்தமே,
பின்னர் எங்ஙணம் எனை மொழிபெயர்ப்பாய் யசோதரா?-


01. வடிவத்தை மறந்து பாதி வழியில் கைவிடப்படுகிற கவிதை

"...கரடு முரடான சொற்களை அவிழ்த்தெறிந்த அர்த்தங்கள்  என்னை அணிந்து கொள்கின்றன..."
"..மோகித்த தம் இதழ்களால்  அந்தக் காயங்களின் தளும்புகள் மீது தடாவித் தருகின்றன..."
"..தூய அர்த்தங்களின் கிறக்கத்தால்  இப் பின்னிரவில் நான்  கிட்டார் இசைக்கிறது"
"..கவர்ச்சியான சொற்களை அணியாத வெறும் இரவு  என்னை மீண்டும் மீண்டும் சபிக்கிறது?"
02. வடிவத்தை மறந்து பாதி வழியில் இந்தக் கவிதையைக் கைவிடுகிறேன் :O
சில வேளை அது எழுதத்துணியாத இந்த இரவின் சொற்களைத்  திணித்து அடைத்ததினால் இருக்கலாம் அதை விட எனக்கோ  அவற்றைக் கற்களாக்கி என்மீதே வீசுவதால்தான்  இன்னொரு என்னை உடைக்க முடியும் என்ற சுய நலம். 
எழுதத்துணியாத வார்த்தைகள் ஒரே வீச்சில் என்னை நொருக்கப் போதுமானவையும் கூட.
இப்படித்தான் நானென்பது சொற்களை அவிழ்த்தெறியும் இரவுகளில்  நின் கவிதைகளின் அர்த்தம்  புதிய என்னை எடுத்து அணிந்து கொள்கிறது.