Skip to main content

யசோதரா!!!


கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது.

(அது எவ்வாறெனில்...)

கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே
யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது.

(அதனால்)

பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி பட்டு விரைக்கிறது ஞானத்தின் குறி.

(அதிலிருந்து)

நம்மைப் பிரித்து வைத்திருக்கிற மூன்றாவது வெசக் நிலவை நீ சபிக்கிறாய்,

தைக்கப்படாத துணியால் போர்த்தப்பட்ட என் துறவைச் சபிக்கிறாய்,

ஆடைகளெதுவுமற்ற முதல்வார்த்தையின் தூய நிர்வாணத்தைச் சபிக்கிறாய்,
ஒரு வண்டு போல இரைந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதன் நீண்ட குறியைச் சபிக்கிறாய்,

விலக்கப்பட்ட கனியையுண்டதும், தூக்கியெறியப்பட்டதுமான இரண்டு சொற்களும்
பிறகு பூமியின் மீது பிணைந்தபடி கிடந்ததைச் சபிக்கிறாய்,

உன்னை நான் அணைத்தபடியிருந்த ஆற்றோரம்
ஒரு குப்பி விளக்குச் சுடருக்குள் தொலைந்து போன
புத்தபிரானின் விரகத் துளிகளைச் சபிக்கிறாய், 

(இத்தனைக்கும்)

யசோதராவாகிய நின் விழியோரம் தேன் போல கசிந்துறைந்திருப்பது என்னுடைய பரிநிர்வாணத்தின் ஒளி.

யசோதரா!
நானென்பது உறையும் கழிவு.
நீயென்பது இடது விலா எலும்பில் சுரக்கும் தேன்.

Comments

Popular posts from this blog

நீயெனப்படும் நள்ளிரவின் கடல் நீல நிறம்

நினைவின்மடிப்புகளுக்குள் வெள்ளைமுத்தங்களெனஎறும்பூரும் இந்தநள்ளிரவின்பெயரென்ன?
உஷ்ணமானஆயிரம்மென்சொற்களாகி கவிதைக்குள்உறைந்துபோன விரகத்தின்சுவைஎன்ன?
வேரெனப்படர்ந்திருக்கும்இந்தப்பேரழகிஇரவின் சுருள்முடிக்கற்றைகளில்கிறங்கி சொற்களைத்தவறவிடும்ஏதிலிக்கு கவிதையன்றிபோக்கிடமேது?
கேள்விகள்செய்தேதீர்ந்துபோன சொற்களிருந்தஇடைவெளிக்குள்ளிருந்து படபடக்கும்நின்காதல் வெறுங்கவிதையின்மீது
கடல்நீலநிறமெனப் படிந்துவிடுகிறது. 
கவிதையேஎன்திரை, கிரீடமும்அதுவே என

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்துபிரிந்த இந்தவெள்ளைஇரவின்ஒளி இருளிலிருந்துநம்மை வெவ்வேறுசொற்களாகப்பிரித்தெடுக்கிறது
நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என நாம்பெயர்தரித்துக்கொண்டஇரவில்
நீஎன்பதுஎப்போதும்போல பிடிக்கமுடியாதகாற்றும்
நான்எனப்படுவது கனவுகளின்இருள்சூழ்ந்ததெருக்களில் முப்பதாண்டுகளாகஅலைந்துதிரியும் கூடுதிரும்பாப்பறவையும்
ஞானமென்பது குற்றம்வழிந்தோடும் மற்றக்கண்ணும்
குற்றத்தின்காயமேபுதியஞானமும்
பசியெனப்படுவதோதன்தெருப்பாடகனின் இசைக்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01
தொக்கிநிற்கவெனஇடப்படும் மூன்றுபுள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாதகவிதையின் அர்த்தங்கள்சிதறுகின்றன
தன்பற்றியெழுதப்படாதகவிதையெனக்  கோபங்கொண்டுபிடுங்கிய தலைமயிரொன்றால் என்னைக்கட்டிவைக்கிறாள்யசோதரா
என்மார்பின்பூனைரோமங்கள் மொத்தமும் பாம்புபோலஅதனோடுஒட்டிப்பிணைந்து கொள்கின்றன
பிறகுவழக்கம்போல அவளைஅதேபெயரறியாதநாணமெனவும் நான்என்பதைபின்னாலிருந்து அணைக்கும் ராட்சதக்காற்றெனவும் இரவுபெயரிட்டுக்கொள்கிறது
மூன்றுவெவ்வேறுநிறைவுற்றபுள்ளிகள் அர்த்தங்களைமுடிவிலியெனஅறிவிக்கும் அபத்தமே கவிதையெனச்சொல்லி விடுவதினின்றும் தலைமயிரின்சுகம்இனிது