அன்பின் இணையத்தள நிர்வாகிகளுக்கு,
இங்கே என்னால் எழுதி இணைக்கப்பட்டுள்ள இதை அரசியல் பற்றிய கதையா அல்லது கட்டுரையா என்று திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது.
இருந்தும் என்னைப் போன்ற சாதாரண பாமரர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலைப் பற்றிய அபிப்பிராயம் இருக்கும் என்பதையும், அரசியல் பற்றி கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் தனது நிலைப்பாட்டைப் பின்பற்றுவதற்கும் பூரண உரிமை இருப்பதையும் மறந்து அல்லது தெரியாமல் 'அரசியல் பேசுவதற்கு அல்லது எங்களை விமர்சிப்பதற்கு உனக்கென்ன தகுதியிருக்கிறது' என்று கேள்விகேட்பது ஒரு நல்ல பண்பாக இருக்கமுடியாது.
இவ்வாறாக அரசியல் பற்றி நான் நினைப்பதையும் கருத்தாகக் கொண்டிருப்பதையும் எழுத்தாக்கிவிடுகின்ற முயற்சியில் வந்ததே இந்தப் பிரதியாகும்.
அரசியல், தேர்தல் என்றாகிவிட்ட பிறகு கருத்துச்சொல்பவரின் தகுதியைப் பார்ப்பதும் அவரை மோசமாக மதிப்பிடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.
அது போக திருமணம் முடிக்கவும், மற்ற மனிதனைப் பார்த்து சிரிக்கவும் வேண்டுமானால் யாருக்கும் தகுதி தேவைப்படலாம். அதையே அரசியல் என்று வரும் போது ஒவ்வொரு தனித் தனி வாக்காளனுக்கும் ஒவ்வொரு கருத்துநிலையும் அதை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும்; இருக்கும் என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது. அரசியலில் பௌதீகமாக இயங்குவது மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியுமானதாகவும், தம்மைவிடவும் யாருக்கும் நேர்மையாகச் சிந்திக்க வராது என்றும் எண்ணுவது அரசியல் பற்றிச் சிந்திப்பது குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்று கேட்கத் தோணுகிறது..
ஆகவேதான் கீழே இணைக்கப்படுகின்ற என்னுடைய எழுத்தினை தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
இது எந்த அரசியல் கட்சியோ சிந்தனையோ சார்ந்த ஒன்றல்ல, மாறாக ஒரு பாமர சாமானிய வாக்காளனின் நிலைப்பாட்டை எழுதிப்பார்த்தது என்பதையும் உறுதியுடன் கூறிக்கொள்வதோடு ஒரு வாக்காளனாக என்னுடைய கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த உதவுவீர்கள் எனவும் நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள
மு அ முஹம்மத் பதீக்
fatheek@gmail.com
நல்லாட்சி என்கிற கறுத்த ஆடும் முஸ்லிம் அரசியல் மேய்ச்சல் நிலமும் என்ற மனப்பிறழ்வில் எழுதப்படும் கதையிது.
இதில் முதற்பாகம் ‘நல்லாட்சி’
“நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்” என்ற உரத்த வாக்கியத்திலிருந்து நமக்கான முகவரியை மாபெருந்தலைவன் தேடித்தந்ததிலிருந்து வரலாறு நமது கதையெனப்படுகிற அதைத் தொடங்குகிறது என ஆரம்பிப்போம்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்ததன் பிறகு நுழைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகையோடு வெறுமனே அரசியல் பாடநெறிகளில் ஒருபாடமாக மட்டும் இருந்த நல்லாட்சி
இதற்கென நிறுவனமயப்பட்டு இந்தக் கருத்தியலை வளர்த்தெடுக்கின்ற அரசியல் சாராத ஜனநாயக செயற்பாட்டாளர்கள் அதிகமானவர்கள் செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.
இங்கே நல்லாட்சி என்ற சொல் கொண்டிருக்கின்ற பொருள் விளக்கம் பற்றியோ மக்களாட்சிக்கு (Democracy) மாற்றாக அது முன்வைக்கப்படுகின்ற தர்க்கங்கள் குறித்தோ ஆராய்வதனை விடவும் அந்தச் சொல்லினை முன்வைத்து இலங்கையின் இயக்கமயப்பட்ட சிந்தனை சார்ந்த சிறு குழுக்களிடம் ஒரு உள்ளுர்க் கதை முஸ்லிம் அரசியலோடு இணைந்ததாகக் கட்டிவிடப்பட்டிருப்பது குறித்தே தேர்தல் காலம் கதைக்கத் தூண்டுகிறது.
எம்.எச.;எம.;அஷ்ரப், முஸ்லிம் தேசியம் அதற்கான அரசியல் தனித்துவம் பற்றிய ஒரு உணர்வு பூர்வமான பிரக்ஞையூட்டுதலை ஆரம்பித்தபோது ஒரு வகையான குழுவாதல் மனநிலை
அதிகாரம் எப்போதும் மனித மனதினைத் தன்பக்கமே வைத்துக்கொள்ளும் என்பதிலிருந்து விதிவிலக்குப்பெறுமளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வானவர்களிடமிருந்து தூது வரப்பெற்றவர்கள் என்பது போன்ற புனைவுகள் மெல்ல மெல்ல அவிழத் தொடங்கியதே முஸ்லிம் சிவில் எதிர்ப்பரசியல் சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட காலம் எனலாம்.
முஸ்லிம் மாகாணத்துக்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான சிவில் அழுத்தங்கள் இளைஞர்களினாலும் இஸ்லாமிய இயக்கங்களின் சிந்தனை கொண்டவர்களினாலும் குழுக்கள் குழுக்களாக அரசியல் சிந்தனை கொண்ட மாணவர்களினாலும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் போதாமையின் மீது சமூக மாற்ற நோக்கத்திலாக இத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அதிலிருந்து இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் கோரிக்கைகள் ஒரு அரசியல் அலகினைக் கோருவதாக அஷ்ரபினால் மீண்டும் புதுப்பதிப்புப் பெறுகின்றன.
அதிலிருந்து மேலும் பல முரண் கருத்தியல்கள், முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமாக பல அரசியல் சார்ந்த சாராத தரப்பினரிடமிருந்து வெளிவரத் தொடங்கின.
தென்கிழக்குப் பல்கலைக் கழகம் முஸ்லிம் தேசம் என்பதைப் பிரகடனம் செய்கிறது.விக்டர் எனப்படுகிறவர் (இவர் முஸ்லிம் தேசம் என்ற சொல்லாடலைப் போலவே இன்னமும் விபரமோ முகவரியோ அறியப்படாதவர் ) அந்த நிழல் முஸ்லிம் தேசத்திற்குள் நுழைந்து ஆய்வொன்றினை வெளியிடுகிறார்.
அதற்குள் முஸ்லிம்களுக்கான சமஷ்டி அதிகாரப் பகிர்வு பற்றி இன்னொருவரின் விதந்துரை உரைக்கப்படுகிறது.
அவ்வாறே உள்ளேயும் முஸ்லிம் அரசியல் கருத்தியல் எல்லாவற்றுக்கும் தனிக்காட்டு ராஜாவாகவிருந்த அஷ்ரபின் மரணம் அதன் பிறகான கட்சி உருவாக்கங்களும், நாட்டில் பேச்சுவார்த்தை என நடாத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்புகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தனக்கான பிரதிநிதித்துவம் செய்தல்
அத்தோடு முஸ்லிம் அரசியல் அல்லது இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வு என்பதிலும் பல்வேறு வகையான கருத்தியல்கள் முன்வைக்கப்பட ஆரம்பிக்கின்றன.
இவை தான் சார்ந்த குழுவை வளர்த்தெடுப்பதற்கானதாக, பாரம்பரிய முஸ்லிம் கட்சியை எதிர்க்கின்றதாகதாக இயங்கத்தொடங்குகின்றன.
அதைவிட இலங்கை அரசியல் பற்றிய அறிவாழமிக்க (Intellectually) கருத்தியல்களை காலத்துக்குக்காலம் கூறிவந்த வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாமிய இயக்கங்களும் தங்கள் பாட்டுக்கு எந்த அரசியல் கட்சியும் சாராத சமூக நலனில் சாய்வுகொண்டும் தமது பாடத்திட்டப்
இதை ஒற்றுமையின்மை என்ற அதிகாரத் தொனியில் பார்த்துவிடுவதை விட ஒரு ஒற்றை வட்டத்துக்குள் அடக்கிவைக்கப்பட ஒண்ணாது திணறும் சமூகத்தின் ஏனைய ஆன்மாக்களின் வெளிவருகை என்பதாகப் பார்ப்பது புதிதாகவிருக்கும் என நம்புகிறேன்.
இத்தகைய கருத்தியல்களுக்குப் பிறகும் அரசியல் தீர்வு என்பதாகப் பேசப்பட்ட சொற்பதமும் அதன் தேவையும் அதற்கான உக்கிரமும் உள்ளுர வளர்ச்சியடைந்துகொண்டே வந்தது என்பதும், அதிகமான அரசியல் கருத்தியல்கள் பிரபாகரன் இறந்துவிட்டதற்குப் பிந்திய இன்றுவரைக்கும்; நம்மிடையே எந்தவொரு நிதானிப்போ, மீள்பரிசீலனையோ (Reconciliation) இன்றி அதே பாணியில் உருவாகிக்கொண்டிருக்கிறதுமே அரசியல் செயற்பாட்டைத் தீர்மானிக்கின்ற கருத்தியலின் சூழல் பற்றிய அறிவின் போதாமையினைத் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறது எனலாம்.
இப்படியானதொரு எளிய சுருக்கமாக முஸ்லிம் அரசியல் என்ற சொல்முறை வளர்ச்சியiனையும் அதன் பெயரிலான வளர்ச்சியடையாத அல்லது அதனை நோக்கி இயங்காத வெறும் நிகழ்ச்சி நிரலுக்குள் சுருங்கிப்போன தூரநோக்கற்ற (non vision) அரசியல் அன்றாடங்காய்ச்சி நிலையையும் கருதிக்கொள்வோமாக இருந்தால் மிக எளிதாக இப்போது நல்லாட்சி என்ற புதிய சொல்லின் சலனத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.
எனக்கென்றால் அது ஒரு பரந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாட்டுக்கூட்டத்துக்குள் தவறி நுழைந்து தன்பாட்டில் சுதாகரித்து வெளிவந்து விட விருப்பமில்லாமல் மேய்ந்துகொண்டிருக்கும் கறுத்த ஆட்டுக் குட்டியொன்று போல இந்த சொல்லின் சலனம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறதாகவே எண்ணத்தோன்றுகிறது.
அல்லது முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தனித்துவ அரசியல் போன்றவற்றை ஒரு மனப்பிறழ்வுக்குள்ளானவரின் புண்ணைப் போல வியாக்கியானம் தந்துகொண்டு அதைச் சொறிந்து சொறிந்தே ஒரு சிறு குழுமத்தின் சமுக வாழ்வுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறதாக உள்ளுர்த் தேர்தல் வரைக்குமான சப்பை அரசியலாக காட்டப்படும் இந்தச் சொல்லினைப் பார்க்க வைக்கிறது.
நல்லதன் மீதிருக்கின்ற ஒரு வகையான நேர்த் தன்மைகொண்ட சமுகப் பொதுப்புத்தியினை (Positively definable predetermined mentality) இத்தகைய குழுக்கள் தமது ஏணிகளாகப் பயன்படுத்த விழைந்தருக்கின்றன என்பதையும் துணிந்து கூறலாம்.
இப்படி இதனைப் பார்க்கத் தொடங்கும் போது இதுவொரு முஸ்லிம் அரசியலுக்குள் தொடராக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளிலிருந்து உருவிலும் நிறத்திலும் மொழிச்சலிலும் வித்தியாசம் கொண்டிருப்பதைப் போலவே உருவத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால் உருவேற்றுவதற்குப் பயன்படுத்துகின்ற கோஷம் மற்றும் உணர்ச்சிபூர்வப் பேச்சுக்களில் தனித்துவமாகக் கேட்கும் சத்தங்கள், உயிரை மாய்ததுத் தீக்குளிக்கவும் தன்னுடலைப் புனிதமாக அர்ப்பணிக்குமளவு தொண்டர் வட்டம், மூளைச் சலவை செய்யப்பட்ட மாணவர் குழு என எல்லாமே எல்லாக் குறைக் கருத்தியல்களைப் போலவும் (சொல்ல மறந்து விட்டேன், முஸ்லிம் மார்க்சியம் கூட பேசிப் பார்த்தார்கள், முடியவில்லை) அஷ்ரபிலிருந்தே திரும்பத் திரும்ப ஆரம்பிப்பதானது பிரச்சாரங்களில் மயங்கி எல்லாவற்றிலுமிருந்தும் விலகிய ஒரு கருத்தியலாக இந்த நல்லாட்சி என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் ஆர்வத்தினைத் தடுத்துவிடுகிறது.
இருந்தாலும் உள்ளுர் மட்டத்தில் இதன் முன்வைப்பு முறைமையிலும் அதன் பின்னால் தெளிவாகப் புலப்படுகின்ற ஒரு வகையான அறம் சார்ந்த அதிகாரத் தோரணையிலும் ( Moral Force) அழகிய முன்மாதிரி போன்ற தூய்மைவாத வசனங்களுக்குள்ளும் இதுவரை அறிமுகமில்லாததொரு தூய்மைவாத வன்முறையொன்றுக்கான வித்துக்கள் மறைந்திருப்பதாகவே அச்சந்தருகிறது.
அதாவது தூய்மையற்ற அல்லது புனிதமற்றவர்களாக விவாதிக்கப்படும் எல்லா மற்றத்தரப்புக்களும் புனிதம், தூய்மை போன்ற அறச்சிக்கல்களினால் அரசியலிலிருக்கத் தகுதியில்லாதன போன்ற சாடுதல்களால் அரசியல் அதிகாரத்தினால் கள நீக்கம் செய்யப்பட்டு இதுவரை நிகழ்ந்திராத நிழல் வன்முறைக்குள்ளாக்கப்படப் போகின்ற அபாயத்தைத்தான் மறைமுகமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அன்றாடங்காய்ச்சி அரசியல் நிகழ்வுகளை விட்டுவிடுவோம்.
இப்படியானதொரு எளிய சுருக்கமாக முஸ்லிம் அரசியல் என்ற சொல்முறை வளர்ச்சியiனையும் அதன் பெயரிலான வளர்ச்சியடையாத அல்லது அதனை நோக்கி இயங்காத வெறும் நிகழ்ச்சி நிரலுக்குள் சுருங்கிப்போன தூரநோக்கற்ற
எனக்கென்றால் அது ஒரு பரந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாட்டுக்கூட்டத்துக்குள் தவறி நுழைந்து தன்பாட்டில் சுதாகரித்து வெளிவந்து விட விருப்பமில்லாமல் மேய்ந்துகொண்டிருக்கும் கறுத்த ஆட்டுக் குட்டியொன்று போல இந்த சொல்லின் சலனம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறதாகவே எண்ணத்தோன்றுகிறது.
அல்லது முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தனித்துவ அரசியல் போன்றவற்றை ஒரு மனப்பிறழ்வுக்குள்ளானவரின் புண்ணைப் போல வியாக்கியானம் தந்துகொண்டு அதைச் சொறிந்து சொறிந்தே ஒரு சிறு குழுமத்தின் சமுக வாழ்வுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறதாக உள்ளுர்த் தேர்தல் வரைக்குமான சப்பை அரசியலாக காட்டப்படும் இந்தச் சொல்லினைப் பார்க்க வைக்கிறது.
நல்லதன் மீதிருக்கின்ற ஒரு வகையான நேர்த் தன்மைகொண்ட சமுகப் பொதுப்புத்தியினை
இப்படி இதனைப் பார்க்கத் தொடங்கும் போது இதுவொரு முஸ்லிம் அரசியலுக்குள் தொடராக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளிலிருந்து உருவிலும் நிறத்திலும் மொழிச்சலிலும் வித்தியாசம் கொண்டிருப்பதைப் போலவே உருவத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால் உருவேற்றுவதற்குப் பயன்படுத்துகின்ற கோஷம் மற்றும் உணர்ச்சிபூர்வப் பேச்சுக்களில் தனித்துவமாகக் கேட்கும் சத்தங்கள், உயிரை மாய்ததுத் தீக்குளிக்கவும் தன்னுடலைப் புனிதமாக அர்ப்பணிக்குமளவு தொண்டர் வட்டம், மூளைச் சலவை செய்யப்பட்ட மாணவர் குழு என எல்லாமே எல்லாக் குறைக் கருத்தியல்களைப் போலவும் (சொல்ல மறந்து விட்டேன், முஸ்லிம் மார்க்சியம் கூட பேசிப் பார்த்தார்கள், முடியவில்லை) அஷ்ரபிலிருந்தே திரும்பத் திரும்ப ஆரம்பிப்பதானது பிரச்சாரங்களில் மயங்கி எல்லாவற்றிலுமிருந்தும் விலகிய ஒரு கருத்தியலாக இந்த நல்லாட்சி என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் ஆர்வத்தினைத் தடுத்துவிடுகிறது.
இருந்தாலும் உள்ளுர் மட்டத்தில் இதன் முன்வைப்பு முறைமையிலும் அதன் பின்னால் தெளிவாகப் புலப்படுகின்ற ஒரு வகையான அறம் சார்ந்த அதிகாரத் தோரணையிலும் (
அதாவது தூய்மையற்ற அல்லது புனிதமற்றவர்களாக விவாதிக்கப்படும் எல்லா மற்றத்தரப்புக்களும் புனிதம், தூய்மை போன்ற அறச்சிக்கல்களினால் அரசியலிலிருக்கத் தகுதியில்லாதன போன்ற சாடுதல்களால் அரசியல் அதிகாரத்தினால் கள நீக்கம் செய்யப்பட்டு இதுவரை நிகழ்ந்திராத நிழல் வன்முறைக்குள்ளாக்கப்படப் போகின்ற அபாயத்தைத்தான் மறைமுகமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அன்றாடங்காய்ச்சி அரசியல் நிகழ்வுகளை விட்டுவிடுவோம்.
நல்லாட்சி என்ற சொல்லின் மீதான ஆரம்பமான கேள்விகளுக்குள் மட்டும் நுழைந்து பார்க்க முடியும் எனக் கருதுகிறேன்.
ஆஹ்..... இப்போதுதான் இன்னொரு நினைப்பு வருகிறது. அதாவது மிக நீண்ட காலமாக இயங்கி வந்த ஜமாஅதே இஸ்லாமியும் தேர்தலில் குதிக்கிறார்களாம்.
அதாவது முப்பது நாற்பது வருடங்களாக வளர்த்தெடுத்த ஒரு கருத்தியலின் அரசியல் வடிவத்தினைத் தேர்தலில் விட்டுப் பரீட்சித்துப் பார்க்கின்ற முயற்சியாகவே இதைக் கருத முடியும். இங்கே இத்தனைகாலத்துக்குப்பிறகு பரீட்சித்துப்பார்க்க முடிவெடுத்திருப்பதே பாராட்டுக்குரியதே.
முஸ்லிம் அரசியல் என்பதில் மேய்ந்த மேலே சொன்ன Intellectual கருத்தியல்களில் ஜமாஅதே இஸ்லாமியும் ஒன்று என்பது குறிப்பிட வேண்டியது.
இப்போது வரும் முதலாவது கேள்வி
நல்லாட்சி என மொழியப்படும் சொல்லுக்கு கொடுக்கப்படுகின்ற விளக்கம் என்பதும் அது முஸ்லிம் தனித்துவ அரசியலில் எவ்வாறு ஒரு தீர்வுத்திட்டமாக முன்வைப்பதற்கான பொருத்தப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதுமாகும்.
அதாவது நல்லாட்சி என்ற ஜனநாயகச் சாய்வுகொண்ட ஒரு கோபரேட் கருத்தியலை அதுவும் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களிடத்தில் ‘இயக்கம்’ என்ற ஒரு தோல்வியுற்றுத் திரும்பிக்கொண்டிருக்கின்ற முகமூடியுடன் (Mask) அதே முஸ்லிம்களுக்கான தீர்வாக, முஸ்லிம் அரசியல் அடையாளத்துக்கான புதிய முகவரியாக (New Address) சொல்ல வருவதும் வெறும் அரசியல் தடித்தனம் என்றுதானே சொல்லிவிட்டுப் போகவேண்டியிருக்கிறது.
ஆஹ்..... இப்போதுதான் இன்னொரு நினைப்பு வருகிறது. அதாவது மிக நீண்ட காலமாக இயங்கி வந்த ஜமாஅதே இஸ்லாமியும் தேர்தலில் குதிக்கிறார்களாம்.
அதாவது முப்பது நாற்பது வருடங்களாக வளர்த்தெடுத்த ஒரு கருத்தியலின் அரசியல் வடிவத்தினைத் தேர்தலில் விட்டுப் பரீட்சித்துப் பார்க்கின்ற முயற்சியாகவே இதைக் கருத முடியும். இங்கே இத்தனைகாலத்துக்குப்பிறகு பரீட்சித்துப்பார்க்க முடிவெடுத்திருப்பதே பாராட்டுக்குரியதே.
முஸ்லிம் அரசியல் என்பதில் மேய்ந்த மேலே சொன்ன
இப்போது வரும் முதலாவது கேள்வி
நல்லாட்சி என மொழியப்படும் சொல்லுக்கு கொடுக்கப்படுகின்ற விளக்கம் என்பதும் அது முஸ்லிம் தனித்துவ அரசியலில் எவ்வாறு ஒரு தீர்வுத்திட்டமாக முன்வைப்பதற்கான பொருத்தப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதுமாகும்.
அதாவது நல்லாட்சி என்ற ஜனநாயகச் சாய்வுகொண்ட ஒரு கோபரேட் கருத்தியலை அதுவும் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களிடத்தில் ‘இயக்கம்’ என்ற ஒரு தோல்வியுற்றுத் திரும்பிக்கொண்டிருக்கின்ற முகமூடியுடன் (Mask) அதே முஸ்லிம்களுக்கான தீர்வாக, முஸ்லிம் அரசியல் அடையாளத்துக்கான புதிய முகவரியாக (New Address) சொல்ல வருவதும் வெறும் அரசியல் தடித்தனம் என்றுதானே சொல்லிவிட்டுப் போகவேண்டியிருக்கிறது.
‘வளர்ச்சியடையத் தொடங்கிய’ என்பதற்குக்கூட பொருந்தாத வெறுமனே சொல்ல ஆரம்பிக்கப்பட்ட புதிய வடிவத்திலான சொல்லாக மட்டுமே முஸ்லிம் ஊர் ஒன்றுக்குள் குப்புறவே படுக்கும் பபாவை (சிறு குழந்தை) முஸ்லிம் சமூகத்தினைக் கட்டியாளப்போகின்ற கருத்தியலாகவும் இதுவரையிருந்த எல்லாவற்றிலும் மேலான மிகச்சரியான அரசியல் தீர்வாகவும் வலிந்து திணிப்பது இதுவரைகால சிறுபான்மை அரசியலையே இழிவுபடுத்தும் செயலாகாதா?? என்பதாகும்.
மற்றது பிரபாகரனின் இறப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரையான முற்று முமுதான அரசியல், சிவில், கலாசார மாற்றங்களை ஒரு தீவிர வேகத்துடன் எல்லா சமூகங்களும் எதிர்நோக்கியிருப்பதும், ஏற்கனவே பிரச்சினைகளாகப் பேசப்பட்ட வாழ்வியலில் தலைகீழாக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும், சமூகவியல் கூறுகளான கலாசாரம், பாலியல், சிவில் சட்டம் போன்றவற்றில் மனித வாழ்வும் தேவைகளும் கிளை பிரிந்திருப்பதும், அதே நேரம் தனிமனித சுதந்திரம், எழுத்து/ஊடக உரிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான இடம் இன்னமும் நெருங்கக் கடினமாக பாரிய இடைவெளிகளையே விட்டுக்கொண்டிருப்பதுமான பெயரிடத் தெரியாத சூழலில் இவற்றை உட்செரித்த புதிய சிந்தனை முகாமாக நல்லாட்சி என்ற கருத்தியல் தனது இயக்கத்தினை (Motion) தொடங்கியிருக்கிறதா?? என்ற கேள்வியும் அரித்துக்கொண்டேயிருக்கிறது.
இவை வெறுமனே ‘நல்ல’ ‘தூய்மையான’ ‘கறைபடியாத’ போன்ற மயக்கந்தரும் பொதுப்புத்திகளைக் கட்டமைக்கும் சொற்பதங்களினால் கவனமாக இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் அவதானிக்க இடமிருக்கிறது.
அரசியலே இருப்பும் வாழ்வுமென ஓதி ஊதப்பட்ட சமூகம் என்பதாலும் அத்தகைய மனநிலையிலிருந்து மாறிவிடாதிருக்கும் கவனத்தோடு தேர்தலைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் எல்லோராலும் உருவேற்றப்படுவதுமே நமது துயரமான தலைவிதியாக இருந்துகொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் அச்சாணியாகவிருந்து இறந்துபோன தேர்தல் வாக்களிப்பு முறைக்குள் தன்னுடைய பலத்தினைக் காட்டிவிடுகின்ற வக்கிரமான பாசிசத்தின் உடல் புதைந்துபோயிருக்கிறதும், அவற்றைச் சுற்றியே கருத்தியல்கள் பின்னப்படுவதும், அதை வெட்கமின்றி சந்தைப்படுத்துவதையெல்லாம் பெரிய புரட்சிகளாக எண்ணிக்கொள்வதும் அரசியலின் அதி இழிந்த நிலையாகத்தான் கணிக்கப்பட வேண்டியவை.
இத்தகைய தத்துவச்சிகலோடுதான் முஸ்லிம் அரசியல் அடையாளத்தைச் சுமந்திருப்பதாகக் கூறப்படும் நானுட்பட்ட சமூகம் ஒரு உள்ளுர்த் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம்.
இங்கே என்னுடைய மனம் பிறழத் தொடங்கும்.
“ நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் “
“ இது நமது விடியலுக்கான பயணம் “.
இவற்றிலிருந்து பிறந்த இன்னொரு மனதிலிருந்து இப்போது ஒரு கதை சொல்லப்போகிறேன்.
இதுவொரு காதல் ததை.
தலைவரைக் காதலித்த கதை.
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காதலின் கதை.
தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி முண்ணாண் வரை எவ்வாறு ஆழச்சென்று தேடி கண்ணீர்த்துளிகளை பனிக்கச்செய்ததோ,
உடலின் எல்லா மூட்டுக்களையும் ஒருதரம் எவ்வாறு உலுக்கிப்பார்த்ததோ,
இன்றுவரைக்கும் தலைவர் என்ற இடத்தினை எவ்வாறு வேறு யாருக்கும் தர மனம் மறுக்கிறதோ
அந்தத் துளித் துளிக் காதல்களில் மொத்த வடிவமாக தெருக்களில் திரிந்துகொண்டிருப்பவள்தான் றகுமத்தும்மா.
ஒரு நான்கைந்து நாளுக்கு முதல் கண்டபோதும் அதே வேகமான நடை.
“என்ன றகுமத்து? எங்கபோறாய்?”
“வெள்ளத்துக்கு அரிசி குடுக்காகளாண்டா மன பள்ளியில.. அதான் பாக்கப் போறன்..
அவருதான் டெலிகொப்டர்ல வர நேரமி;ல்லையாம் எண்டு குடுத்தனுப்பினயாம்...
வாரமாசம் வந்து கலியாணத்தையும் முடிச்சி என்ன கூட்டிட்டே போறயாம்...
கட்டில் செய்ய வாசல்ல தேக்க மரமிலுவா நாட்டச்செல்லி நான் நாட்டின..
இந்தப் பல்லும் செரியில்லயெண்டு தங்கப்பல்லுக் கட்டச் செல்லிரிக்காரு...
வாரமாசம் வந்து கலியாணத்தையும் முடிச்சி என்ன கூட்டிட்டே போறதானாம்
மதுரோண்டியில செல்லி வெச்சிரிக்கன் அரைக்கயும் வேணுன்டா மன..
எண்ட அசரபுட போட்டோ பாத்தயா மன நீ??
கோட்டுப் போட்டு சந்திரிக்காவோட நிண்டு எடுத்தயாமெண்டு எனக்கு கடிதத்தோ வெச்சி அனுப்பிருந்தாரு.”
றகுமத்து அப்படியே இன்னமும் அஷ்ரப் கூட்டிட்டுப்போக வருவார் என்ற அபத்தமான காதலுடன் அஷ்ரப் இறந்துவிட்ட செய்தியையும் மனப்பிறழ்விலிருந்து வரும் உளறலாக நம்பி நடந்துகொண்டேயிருக்கிறாள்.
இருக்கிறவர்கள் அஷ்ரபின் பெயரையும் அவருடனான அனுபவத்தையும் பெருமிதமாகச் சொல்லி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இல்லாதவர்கள் அவருடைய பெயராலும் அவருக்கு மாற்றான கருத்தியல்களாலும் காலத்தைக் கடத்துகிறார்கள்.
முஸ்லிம் அரசியல் அடையாளம் என்ற வார்த்தை அஷ்ரபிலிருந்தே ஒரு திரண்ட சக்தியாக அரசியல் முறைமைக்குள் நுழையத் தொடங்கியதாலும் அது மட்டுமே இன்று வரை வடிவமாற்றங்களுடனும் மொழிப் பிறழ்வுகளுடனும் தொடர்ந்துகொண்டிருப்பதாலுமே இதை அஷ்ரபில் தொடங்கி அஷ்ரபில் முடிக்கவேண்டியாயிற்று.
வேறென்ன செய்யமுடியும் இனி அரசியலை என்பது சுபகு வரை தூங்காது இதை எழுதிய எனக்குள் விரக்தியாக மாறி தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.
எல்லோரும் பைத்தியம்போல தெரியத் தொடங்குகிறார்கள்.
‘அஷ்ரப் வருவார்.’
கை கால்களில் ஒரு கீறல் கூட இல்லாமல் ஓரத்துத் தலைமுடியும் தாடியும் முழுக்க வெள்ளையாகி
அதே மஞ்சள் கோட் அணிந்து அஷ்ரப் வருவார்.
“இது எமக்கான விடியலைநோக்கிய பயணம்;” என்று பேசத்தொடங்குவார்.
பாவம் உங்களுக்கு எனது அரசியல் புரியாமல் முழிக்கிறீர்கள் :)

அஷ்ரபிலிருந்து தொடங்கிய அத்தனையையும் நிற்பாட்டிப் பார்க்கலாம்,
சிலநேரம் அதற்காகத்தான் அவர் இன்னமும் வராமல் காத்திருக்கிறாரோ என்னமோ...
நானும் அஷ்ரபை/ மாபெருந் தலைவனைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன் இப்போது..
காதலால் மட்டும்தான் நம்பிக்கையோடு காத்திருக்க முடியும்.
றகுமத்தைப் பைத்தியம் என்பது போல என்னையும் பைத்தியம் என்றே அழையுங்கள்.
நான் தலைவருக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.
சுபஹுக்குப் போகும் நேரம் விழுந்த மழைத்தூரலுடன் “ நான் எனும் நீ “ யையும் “மரத்துக்கென்ன நிழலின்” சில வரிகளையும் நினைவுகளாகக் கரைத்துவிட்டேன்.
இன்னேரம் அவர் இப்படி ஏராளமாக எழுதி வைத்திருப்பார்,
.........................................................................................................................................................................................
.........................................................................................................................................................................................
No response to “நல்லாட்சி என்கிற கறுத்த ஆடும் முஸ்லிம் அரசியல் மேய்ச்சல் நிலமும் என்ற மனப்பிறழ்வில் எழுதப்படும் கதையிது.”
Post a Comment