மழை தூறிக்கொண்டிருக்கிற இருள் உறைந்துபோய்க் கிடக்கிற
வானத்தில் இன்னும் நட்சத்திரங்கள் சில நம்பிக்கையோடு காத்திருக்கிற புதிய நாளாகிப்போனதை
அச்சத்தோடு எதிர்கொள்கிறேன்.
அச்சம் என்பது மழை உரப்பது அல்லது தூறாமல் விடுவது என்பதுதானா உனக்கு,
மிஞ்சிப் போனால் வீட்டு வராந்தை வரை வெள்ளம் ஏறுவது??
போடி மக்கு..
மழையின் நிறம் பற்றி அறியாமலா ஒவ்வொருநாளும் திட்டு வாங்கிக் கொண்டு நனைவதாகச் சொல்லுகிறாய்.
நீ எத்தி விளையாடும் தூறலிலிருந்து பிரியும் வானத்து நிறங்களை
உறிஞ்சியெடுத்ததைத்தான் முத்தம் முத்தமென்று அடிக்கடி புலம்புகிறதோ உனது புறங்கை
அதுவல்ல இது
இது சத்தில்லாத நாட்களைப் பற்றியது, அவற்றுக்கு வண்ணம் பூசுவது பற்றியது
இறப்பின் கட்டியமாக இரட்டை நிறங்களோடு சாய்ந்து போகும்
பொழுதுகள் ஆரம்பமாகவும் முடிவாகவும் விதிக்கப்பட்ட ஏழை நாட்களைப் பற்றியது.
அதில் ஒன்று வெண்மை
(Frida வின் இடுப்பு முறிவு குணமாகிய போது
அவளால் வண்ணமாக தீட்டி முடிக்கப்பட்ட ஓவியமாக அது கழற்றியெடுக்கப்பட்டது,)
மற்றையது இருட்டு நிறம்
என்னுடைய அணியத் தேவையில்லாது போன பனிக்காலத்து அங்கியை நினைவுறுத்துகிறது.
நாளை மிகவும் சிறிய ஓவியமேயாதலால்
இப்போது தொடங்கினாலும் போதும்.
கொஞ்ச மழையின் நிறத்தாலேயே நிரப்பிவிடலாம்.
பசி மிகுதியால் நாட்கள் பாதியில் முறிந்துவிடும் அபாயமிருக்கிறது
( Frida and Leon Trotsky begin an affair, which forces the married Trotsky to leave the safety of his home. - Wikipedia)
Wednesday, 5 January 2011
« Newer Post
Older Post »
One response to “மழையைப் பற்றி உளறுவதாக எண்ணி உன்னால் கைவிடப்பட்ட பிறகு”
தோழரே சொல்கிறேன் என கோபித்துக் கொள்ளாதீர்கள் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆதங்கம் இன்னும் எளிமையாக இருந்தால் புரியும் படியாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது...
Post a Comment