Saturday, 9 October 2010

சும்மா இருக்கும் நாட்களில் எழுதிப் பழகுதல்

நான் கவிதையெழுதப் போவதில்லை
நான் கவிதையே எழுதப் போவதில்லை
நான் கவிதையென்று எதையும் எழுதப் போவதில்லை

சூழ்ந்திருக்கும் வாழ்வின் மீது சற்று முன் அடித்த ரூம் ஸ்பிரேயின் வாசம்
வந்து அப்பிக்கொள்கிறது
மகிழ்ச்சி

நீண்ட மௌனத்துக்குப் பிறகான வார்த்தைகளென்றிருந்தவை
அர்த்தங்களில் கோட்டை விடுகின்றன

முடிவெடுக்கப்பட்ட அர்த்தங்களை இழப்பதே
வாழ்வாகுவதற்கான அடிப்படையென்றாகியது
துக்கம்

i do apologize for complaining

கார்ப்பட்டில் சிந்திவிடுகிற தேநீரின் மண்டியினை உடனேயே சுத்தப்படுத்திவிட வேண்டும்

இல்லை காலநிலைக்கு அடிமையாகி போர்வைக்குள்ளேயே மூழ்கி
நீண்ட காலங்களுக்கு இறந்து கிடக்க வேண்டும்

காத்துக்கொண்டிருத்தலின் நாட்களை இப்படியே ஒவ்வொன்றாகக் கடத்த முடியும்

போய்ச் சேரவேண்டிய இடம் - வாழ்வு
இருந்து வருகிற இடம் - வாழ்வு

தூக்கம் கலைந்து பார்க்கும் போது சிந்திய மண்டி என்பது அழியாத கறையென மாறியிருக்கும்

No response to “சும்மா இருக்கும் நாட்களில் எழுதிப் பழகுதல்”