Friday, January 15, 2010

அரசியல் என்பது தாயைப் புணருவதிலிருந்து தோற்றம் பெறுகிறது.

ஆதத்தின் மகன்களிருவர்
சகோதரியைப் புணர்வதற்குப் பிடித்த சண்டையில்
ஒருத்தன் மாண்டுபோனான்.
அதிலிருந்து புணருவதும் கொலை செய்வதும் இருந்தது.
அரசியல் இருக்கவில்லை.

ஆதத்தின் கொள்ளுப் பேரன்களிலொருவன்
தாயோடு புணருகையில்
தெறித்த இந்திரியம் உறைந்து கருவாடாகி
அதிலிருந்தே அரசியல் புளுப் புளுவாக நெளிந்து
வெளிவரத் தொடங்குகிறது.

வரலாற்றின்படி அரசியல் என்பது தாயைப் புணருவதிலிருந்தே
தோற்றம் பெறுகிறது.

ஹெயிட்டியில் மண்டை பிளந்த குழந்தைக்கு
துடைக்கவும் துணியற்று
வீணியோடு சேர்ந்து இரத்தம் வழிந்த வண்ணமிருக்கிறது.

கருவாட்டிலிருந்து நெளிந்த புளுக்கள்தான் அவையென்றும்
இதுதான் அபத்தமாக நிகழ்வது என்றும்
விளங்கப்படுத்துவதற்காக
விகாரமாக முகம் சிதைந்த
குழந்தையொன்றைக் கையிலேந்திக்கொண்டு
கால்மாக்ஸ் கனவில் வந்தான்.

இலங்கைக்கென்று
பலூனில் நிரப்பியனுப்பப்பட்ட ஒபாமாவின் குசு
சம காலத்தில்
தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றின்படி அரசியல் என்பது தாயைப் புணருவதிலிருந்தே
தோற்றம் பெறுகிறது.

அதுவே இயங்கியலுமாகும்







(இந்தக் கவிதை ஹெயிட்டியில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற, உலகைப் பிரிந்துவிட்ட எல்லா உயிர்களுக்குமான சமர்ப்பணம்.)

0 கருத்துக்கள்: