உயிரற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிற அமைதியில்
அழகான காதலின் இசை மோதி அழிந்துகொண்டிருக்கிறது.
சாயத்தையே கண்டிராத உன்னுடைய ரோஸ் நிற உதட்டினை எண்ணி
நித்திரை அத்தவானப்படுகிறது.
ஒன்றாகவும் பலதாகவும் சேர்த்து வந்த
உன்னுடைய சிரிப்புத்துண்டுகள்
பாம்புப் புணர்ச்சி போல கோடு கோடாகப்பின்னி
இப்போது அவை கலைந்த பெரும் ஓவியமொன்றாகியிருக்கின்றன என்னுடைய சுவர் நிரம்ப...
இதற்கு மேலும் எழுதவியலாத கவிதைகளில் இதையும் ஒன்றாக்கி இத்தோடு முடிகிறது இந்தக் கவிதை
கிட்டத்தில் நீயில்லாத போது எனக்கு மட்டுமென்ன அடங்காத கவிதை
Thursday, September 24, 2009
Tuesday, September 8, 2009
உலவியம் பேசுதல் என்கின்ற கெட்ட பழக்கம்
"when you reach fedup uravaniyam mix up in the writings. so bad"
இப்படியொரு எஸ்எம் எஸ்ஸினை அவர் எனக்கு அனுப்பியிருந்தார்.
Pornography யை அப்போது சைட்டில் போட்டிருக்கவில்லை நல்ல காலம்..
அவருக்கு மச்சான் என்று பெயர் என வைத்துக் கொள்வோம்.
மச்சானின் பிரச்சினை என்ன என்ற குழப்பம் எனக்கு அரைத்தூக்கத்தில் சிந்திக்கும் போதே விளங்கிக் கொண்டது.
இந்தக் கவிதையில் யோனி என்ற சொல் வந்ததற்காகத்தான் இந்த எஸ்எம்எஸ் என்று நினைக்கிறேன்.
எங்களுடைய மொழியில் பாலுறுப்புக்களைக் குறிக்கும் சொற்களை உரவனியம் அல்லது உலவியம் என்று பொதுவாகச் சொல்வதுண்டு.
அதனால் அது நல்லதில்லை என்பது அக்கறையுள்ள இந்த மச்சானின் கருத்து.
இங்கே செக்ஸ் என்பது பற்றியும் அது சமுகத் படிமங்களோடு பின்னப்பட்டுள்ள மொழியைப் பற்றியும் நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டியிருக்கிறது.
(எல்லாவற்றிற்கும் மேல் இந்தக் கவிதையில் செக்ஸ் என்பதற்கு எந்தத் தொடர்புமில்லை என்பது வேறு விடயம்)
மிகவும் நெருங்கிப்பழகுபவர்களை மச்சான் என்று கூப்புடுவது போல எனது எழுத்தோடு மிக நெருங்கியிருக்கின்ற இவரையும் மச்சான் என்றழைப்பதில் பிரச்சினையில்லை.
மச்சான் மட்டுமல்ல மூடப்பட்ட சமுக முறைமையினை எவ்விதக் கேள்விகளுமின்றி ஏற்று வாழப்பழகிவிட்ட எல்லோரினது கருத்துநிலைகளுமே இவ்வாறானாதாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதார, தொழில்நுட்ப, அறிவு என எந்த வளர்ச்சியுமே அதில் மாற்றம் செய்துவிடுவதில்லை.
இவ்வளவு பேசுகின்ற மேற்குலகிலும் கூட போர்னோக்ராபி என்பது வளர்ந்து வருகின்ற ஒரு சந்தையாகவே இருந்து கொண்டிருக்கிறது.
செக்ஸ் பற்றிய உரையாடல் என்பதும் எதிர்ப்பால் பற்றின புரிதல் என்பதும் என்னைப் பொறுத்தவரை மொழியினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றதும், அதிகாரம் மொழியைக் கொண்டு அதனைக் கட்டுப்படுத்தி ஒரு ஒழுங்கை விட்டும் வெளிவந்துவிடாதபடி பார்த்துக் கொண்டிருப்பதாகவுமே சொல்ல முடியும்.
இத்ரீஸ் தனது கட்டுரையொன்றில் சொல்வது போல தனது பாலுறுப்பு பற்றின முதலாவது அறிமுகம் ஒரு குழந்தைக்கு அதனைத் தொட்டுப்பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.
அது தனது விரல்களைக் கண்டடைவதற்கும் அவற்றைச் சப்புவதில் இன்புறுவதற்கும் ஒத்த ஒரே தரத்திலேயே யோனியையோ குறியினையோ அணுகவும் அவற்றினைக் கண்டடைவதனூடாக இன்புறவும் தொடங்குகிறது.
இங்கேதான் அதிகாரம் முதன்முதலாக அந்த விரல்களைத் தட்டிவிடத் தொடங்குகிறது.
அதைப் பிடித்துப்பார்ப்பது ஹராம் என்ற மொழியாடலை மிகச் சிறிய வயதிலிருந்தே குழந்தையிடம் பதியவைக்கத் தொடங்க, உடல் என்பதனைக் கண்டடைவதற்கான வேட்கை குழந்தையிலிருந்தே
மறைத்துக் கொண்டு அதனைச் செய்கின்ற நிலையாக ஒவ்வொரு குழந்தையிலும் உருவாகத் தொடங்குகிறது.
அதிலிருந்து அதிகாரம் அல்லது மொழியானது கற்பிக்கத் தொடங்குகின்ற பாலியல் என்கின்ற மூடப்பட்ட ஒரு மிகத்தூரத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் கதைக்கும்,
ஒரு குழந்தை திருட்டுத்தனமாகப் பிடித்துப்பார்த்து இன்புறத்தொடங்கி அறிந்து வைத்திருக்கின்ற உண்மைக்குமிடையிலான மிகப் பெரும் இடைவெளி தென்படத் தொடங்குகிறது.
இந்த இடத்திலான எனது அனுபவம் மிகவும் சுவாரசியமானது.
பாலியல் பருவமெய்துதல் தொடர்பாக பாடத்திட்டத்தின் படி நாங்கள் மார்க்க விடயங்களை எட்டாமாண்டிலும் ( பதிமூன்று வயதிலும்) சுகாதார விடயங்களை ஒன்பதாமாண்டிலும் (பதிநான்கு) அறிந்தால் போதுமானதாகவே சிலபஸ் எழுதப்பட்டிருந்தோம்.
அந்தப் புத்தகங்கள் எல்லாவற்றிலும் அப்போதைய கல்வியமைச்சர் ரிச்சட் பத்திரணவின் பெயர் தாங்கிய ஒரு ஆசிச் செய்தியும் இருக்கும்.
அதில் இஸ்லாம் பாடப் புத்தகத்தில் ( அதில் கதையாகச் சொல்லப்படுகின்ற ஒரேயொரு பாடமே இதுதான்.) ஜனாபத்து என்ற பாடம்.
அவருடைய பெயர் சலீம் என்றுதான் நினைக்கிறேன்.
அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது சாரனில் ஈரமாக இருப்பதை உணர உடனே தனது நண்பனின் வீட்டுக்குச் சென்று பதற்றத்துடன் விளக்கம் கேட்பார்.
நண்பர் அவர் பருவமடைந்திருப்பதாகச் சொல்லி
மேலதிக விளக்கத்திற்காக மௌலவியிடம் அழைத்துச் செல்ல மௌலவி அப்போதுதான் அதை சலீமுக்கு விளங்கப்படுதத்தி அப்படி நடந்தால் உடம்பில் எல்லா இடத்திலும் தண்ணீர் பட குளிக்க வேண்டும் என்று பல விடயங்களைச் சொல்லிக் கொடுப்பதாக கதைபோகும்......
நிற்க.,
விசயத்துக்கு வருவோம் மச்சான்,
நான் இப்படி கதை புத்தகத்தில் இருப்பதாக கேள்விப்படும்போது எனக்கு பதினொரு வயது,
அப்போதே அந்தப் புத்தகத்தையும், எல்லாப் படமும் விளக்கமும் போடிருப்பதாகக் கேள்விப்பட்ட ஒன்பதாமாண்டு சுகாதாரப்புத்தகத்தையும் நான் உடனேயே அமத்திக் கொண்டு ஒரே மூச்சில் பார்த்து முடித்தபோது சப்பென்று போனது.
ப்.. பு.. இவ்வளவுந்தானா என்றிருந்தது.
ஏனெனில் அதைவிட அதிகமாகவே நான் எனது வயதொத்த நண்பர்களுடனான உரையாடல்களில் அறிந்து வைத்திருந்தேன்.
இது நடந்தது ஒரு எட்டு ஒன்பது வருடங்களுக்கு முதல்...
அப்போதிருந்த ஒன்பதாமாண்டு புத்தகமே இரண்டுவருடங்கள் பின்தங்கியிருந்ததாக எனது அவதானம்.
பாலியல் பற்றி போதிக்கவே பஞ்சப்படுககின்ற அல்லது மறைத்து வைத்துக்கொள்ளப் பார்க்கின்ற அதிகாரம் நிறைந்ததுதான் எமது கல்வி நிலவரம்.
நாமெல்லோரும் அப்படியே போதிக்கப்பட்டவர்கள்.
இது போக நமது சமுகக் கருவிகளான குடும்ப அமைப்புக்களில் காணப்படுகின்ற ஒருவகை ஆணாதிக்க மரபும்,
குறிமைய அதிகாரமும், எதிர்ப்பால் பற்றிய ஒரு வகையான மூர்க்கத் தனத்தோடும் ஒரு வகை பிம்பங்களோடுமாக
தலைமுறைகளை உருவாக்கி கொண்டிருக்கிற வாப்பர்த்தனங்களும் இதிலுள்ள இரண்டாவது பிரச்சினை.
உதாரணமாக பெண் பற்றிய முரண் புரிதல்களும் பெண் என்பதனை தனக்கு நிகரான இன்னொன்றாக சிந்திப்பதற்கு இடங்கொடுக்காத ஆண்வழி மனப்போக்கும்,
அதற்காக பெண்ணுடல் பற்றிய அறிதல்களை ஒருவகை சடங்குகளாகவும் பாலியல் இன்பங்களாகவும் இன்னுமாகவும் கட்டமைத்து
தனது லிங்கத்தின், அதன் அதிகாரத்தின் இருப்பைத் தக்கவைக்கவே பெண்ணுடலைப் பயன்படுத்துகின்ற ஆணதிகாரப் போக்கையும் குறிப்பிட முடியும்.
இந்த இரண்டு நிலைகளும் ஒழுங்கமைகின்ற புள்ளியிலிருந்து நாம் எல்லோருமாக எஸ் எம் எஸ் அனுப்பிய மச்சானும் சேர்த்து விடுபட வேண்டிய தேவையிருக்கிறது.
ஆனாலும் அதைவிட்டும் நம்மைத் தடுத்துக் கொண்டிருக்கிற கடுஞ்சுவர்தான் இந்த முற்கற்பிதம் கொண்ட மொழி.
இந் மொழியில்தான் வழிசல் கதைகள், பேசக் கூடாதவை, இப்போது பேசத் தேவையில்லாவவை போன்ற மதிப்பீடுகளையும் வகைப் படுத்தல்களையும் அதிகாரம் நிரப்பி வைத்திருக்கிறது.
பத்திரிகைகளும் இயக்கங்களும் அதற்குச் சொறிந்து சொறிந்தே தமது இதழ்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய மொழிக்குள்ளும் மதிப்பீட்டுக்குள்ளும் இருக்கின்ற மச்சான் யோனி என்ற சொல்லுக்கே எஸ்எம்எஸ் அனுப்புவது நமது காலத்தின் துயர் என்றுதான் சொல்லிவிட்டுப் போகவேண்டியிருக்கிறது.
வேறென்ன செய்ய..
இந்த மொழியிலிருந்தும் அவை நம்மீது நாமறியாமலேயே திணித்து விடுகின்ற ஆணதிகார மனநோயிலிருந்தும் விடுபடவேண்டியிருக்கிறது.
உண்மையில் இந்த எஸ்எம்எஸ் Pornography யின் பிறகு வந்திருக்க வேண்டியது.
இப்போது அதுவும் பதிவிடப்பட்டிருக்கிறது.
அடிப்படைவாதிகளும் என்னவெல்லாம் அனுப்பப் போகிறார்கள் என்று..
மச்சானும் கட்டாயம் ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவார்.
மச்சானும் கட்டாயம் ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவார்.
போர்னோகிராபி
முதலில் நீயெனக்குச் சொல்லித்தந்தபடி
மூடப்பட்ட யோனிகள் பற்றின கிளர்வில்
என்னைத் திரவமாக்கியபடியிருந்தேன்.
பின் விரிந்த யோனிகள் பற்றின கதைகளைச் சொன்னாய்
அவற்றின் உதடுகள் பற்றியும் நுணுக்கங்கள் பற்றியும் கூட
எனக்குச் சொல்லித் தந்தாய்
ஒவ்வொரு பொழுதிலும்
அதை நான் பார்த்து விடாதிருக்கும் கவனமும்
உன் பயமுறுத்தலும் உரத்த பொலிஸ்காரத்தனமாய்
என்மீதே குவிந்திருந்தன
அப்போதெல்லாம் என் குறியைப் பற்றிய பெருமிதத்திலேயே
என்னை ஆழ்த்தியிருந்தாய்
நிறுத்தாத உன் கதை சொல்லுகையாலும்
அதன் வன்மத்தினாலும்
உன்னை வெறுக்கவும் உன்னுடைய கதைகளை
மீறவுமாகத் தலைப்பட்ட நாளின் பின்
யுகாந்திரத்து எல்லா யோனி வடிவங்களிலும் தேடியாயிற்று
என் திரையில் நீ வரைந்து விட்ட வடிவத்திலான யோனி ஒன்றை
உன்னுடைய கதைகளால் இப்படியாய் ஏமாற்றப்பட்ட பின்னும்
அவற்றின் உருவகத்தில் நான் திரவமாகுவதும்
யோனிகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதும் தொடர்ந்தபடியேயிருக்கிறது
ஏனென்று தெரியாமல்
முழுக்க ஈரலிப்புடன் என்னை வதைத்துக் கொண்டிருந்த ஒரு இரவின் குரல்தான்
எனக்குள் இதை உணர்த்தியது
இப்படியாகத்தான் நீயென்னை
குறியைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆணாகவும்
யோனிகளைப் பார்க்குகிற மனநோயாளியாகவும் கடைசியில் அலையச்செய்திருக்கிறதாக
உயிர்நிழல்
ஜனவரி - ஜுலை 2009
மூடப்பட்ட யோனிகள் பற்றின கிளர்வில்
என்னைத் திரவமாக்கியபடியிருந்தேன்.
பின் விரிந்த யோனிகள் பற்றின கதைகளைச் சொன்னாய்
அவற்றின் உதடுகள் பற்றியும் நுணுக்கங்கள் பற்றியும் கூட
எனக்குச் சொல்லித் தந்தாய்
ஒவ்வொரு பொழுதிலும்
அதை நான் பார்த்து விடாதிருக்கும் கவனமும்
உன் பயமுறுத்தலும் உரத்த பொலிஸ்காரத்தனமாய்
என்மீதே குவிந்திருந்தன
அப்போதெல்லாம் என் குறியைப் பற்றிய பெருமிதத்திலேயே
என்னை ஆழ்த்தியிருந்தாய்
நிறுத்தாத உன் கதை சொல்லுகையாலும்
அதன் வன்மத்தினாலும்
உன்னை வெறுக்கவும் உன்னுடைய கதைகளை
மீறவுமாகத் தலைப்பட்ட நாளின் பின்
யுகாந்திரத்து எல்லா யோனி வடிவங்களிலும் தேடியாயிற்று
என் திரையில் நீ வரைந்து விட்ட வடிவத்திலான யோனி ஒன்றை
உன்னுடைய கதைகளால் இப்படியாய் ஏமாற்றப்பட்ட பின்னும்
அவற்றின் உருவகத்தில் நான் திரவமாகுவதும்
யோனிகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதும் தொடர்ந்தபடியேயிருக்கிறது
ஏனென்று தெரியாமல்
முழுக்க ஈரலிப்புடன் என்னை வதைத்துக் கொண்டிருந்த ஒரு இரவின் குரல்தான்
எனக்குள் இதை உணர்த்தியது
இப்படியாகத்தான் நீயென்னை
குறியைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆணாகவும்
யோனிகளைப் பார்க்குகிற மனநோயாளியாகவும் கடைசியில் அலையச்செய்திருக்கிறதாக
உயிர்நிழல்
ஜனவரி - ஜுலை 2009
Subscribe to:
Posts (Atom)