Tuesday, June 23, 2009

நிர்வாணங்களை விரும்புதல்




காலத்தின்
இடுக்குகளுக்குள்ளிருந்து
மெல்லத்
தன்னை விடுவித்துக் கொள்ளும் எத்தனம் மட்டுமே
சாத்தியமாயிருக்கிறது கவிதைக்கு

அவர்களால் எழுதிவைக்கப்பட்ட எல்லாப் புத்தகங்களையும்
இருப்பாட்டிப் போதித்த எல்லாப் பாடத்திட்டங்களையும்
மீறிவிட்ட
வாழ்வினோடு வெள்ளைக்காரத்தன சௌகரியங்களாக
எப்படி ழுதிவிட முடியும் கவிதைகளை

ஒற்றையாய் தனித்து நீள்வதும் படர்வதும் பின் அழிவதுமாக
வரலாறு என்னை அலைக்களிக்கிறது

சிவப்புச் சால்வைக்காரர்கள் செதுக்கத் தொடங்கியிருக்கிற பகவான் சிலைகள்
காவியை நீட்டித் தள்ளிய நீண்ட குஞ்
சாமணிகளுடன் முளைத்தெழும்லாம்
புதிதானதொரு வரலாற்றில்...

அல்லது மனித இரத்தம் இனித் தேசிய பானமாகும் என்று
உலக வல்லரசுகள் புதிதான மொழிகளிலெல்லாம் யுத்தங்களை அறிவிக்கலாம்

இல்லை அகதி முகாமின் பின் மணலில்
தாயின் வருகைக்காகக் காத்துக்கொண்டு
கொசு விரட்டிக்கொண்டிருந்த பீக்கும்பத்தை தானே மூடி
மிருகப்
படம் போட்ட மஞ்சள் துணியினால் துடைத்துவிட்டு
குழந்தை தன் வழியில் நடக்கத் துவங்கலாம்
நோயுற்றிருக்கிற காலங்களுக்கு வெளியால்



நிறுத்திட முடியா பெருவீச்சான விசையுடன்
நடந்தேறிக் கொண்டிருக்கிற அவலங்களின் துயர் பற்றி
விறைப்படங்கிப் போன மொழியினால் இனியெதையும் வசைத்துவிட இயலாதுதான்
,

சங்கிலிப் பேயென உலாவிக் கொண்டிருக்கிற இந்த நள்ளிவிலிருந்து
அந்தக் காத்திருப்பைத் தொடங்கவிருக்கிறேன்

மொழியிருந்து அர்த்தங்கள் விடுபடுகின்றதும்
உலகில் எல்லோரும் உரியப்பட்ட நிர்வாணிகளாக நிற்கின்றதுமான
அந்த ஒற்றை நாளுக்காக