உன்னை இரண்டு தேவதைகள் அலங்கரித்துக் கூட்டி வருவது போல
கனவு காண்கிறேன்.
சாயமற்ற உன் உதட்டிலிருந்து என்னைக் காணும் வரை
அந்தக் கோடு கீறப்பட்டிருக்கவில்லை.
காற்று மிகவும் மகிழ்கிறது இரண்டாம் காட்சியாகக் காட்டப்படுகிறது.
என்னை உலகத்தைவிட்டும் தூரக் கூட்டிச் சென்று நிப்பாட்டி வைத்திருக்கிற
விஷ ஜந்துக்களை ஒரே வெட்டாக வெட்டி விட்டு நான் எனது உடைவாளுடன் உன்னை நெருங்கிக் கொண்டிருப்பது
அதில் இடைவேளைக்கு முந்திய கட்டம்
இடையில் வரும் இரண்டு பாட்டுக்களில் ஒன்றில்
நீயும் நானும் நிர்வாணத்துடன் பிணைந்த படி கிடக்கிறோம்.
இடைவேளையோடு
திரையில் ஒரே கறுப்பு
கரண்ட் போய்விட்டதோ அல்லது நானாகக் கண்முழித்துவிட்டேனோ தெளிவாகத் தெரியவில்லை..
என்னை வதைக்கத் தொடங்கியிருக்கிற நீ எங்கிருக்கிறாய்.
1 கருத்துக்கள்:
hi fatheek, hw r u,u know me!i am ur salani frm seusl,recntly v talkd mre frnkly..i am so happy 4 dat,keep in touch,bye dr
Post a Comment