எழுதப்பட்டு மூடிவைக்கப்பட்டிருந்த எல்லாக் காகிதங்களும்
எரிந்து விடுகின்றன
காற்று மறுக்க முடியாத நிர்ப்பந்தத்துடன்
கரித்துகள்களைக் காவிக் கொண்டு பறக்கிறது.
துயரங்களும் இல்லாமைகளும்
வேதனைகளும் வரலாறும் குசுக்களும் நிரம்பியிருந்த
காகிதங்களின் கரி காற்றோடு பறக்கிறது
ஆஹா..
நிரம்பக் காதலுடன்
முத்து முத்தென அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட
ஓரமாகப் போய் ஒதுங்கிக் கொள்கின்றன
நீ நீ யென்ற ஒற்றை எழுத்துக்களால் மின்னியபடி.
நீ நீ யென்ற ஒற்றை எழுத்துக்களால் மின்னியபடி.
2 கருத்துக்கள்:
மானிட வாழ்வின் ஜீவநாடியென ஓடுவது புகழாரம்,செல்வப்பெருக்கு,புள்ளை குட்டிகள் என ஆளுக்காள் வேறுபடும்.. பூமியெங்கும் புன்னகைகளால் நிரம்பி வழியவும்.. ஆளையாள் மானுட கதலால் சமாதானிக்கவும் சட எல்லைகள் தாண்டிய இறைகாதல் ஜீவநாடியாகிற போது கிடைக்கிற இன்பம் பெரிது..
அப்போது உன் கவிதையும் ஒரு வெள்ளை பூப்போல தஸ்பீஹு செய்யும்... நாம் சொல்ல வேண்டிய எல்லா சுப்ஹானள்ளாக் களுக்கிடையிலும் இந்த வரிகளைப்போல் நிறையப்பூக்கள் நிரம்பிக்கிடக்க வேண்டும்....
காகிதங்கள் எரியட்டும்
மனிதம் கண் விழிக்கட்டும்
Post a Comment