Wednesday, December 9, 2009

தினமும் பேப்பர் பார்த்தல்

கெட்டி ப்ரைஸ் எனப்படுகிற முப்பத்தொரு வயதான ஜோர்டானின் முலைகள் பற்றி
பல விவாதங்கள் இருக்கின்றன.

அது ஜெலிக்கன் கொண்டு செதுக்கப்பட்டது என்று பெண்கள் பேசிக் கொள்கின்றனர்.

அவளை அழகியாக்கி முன்னட்டையில் பிரசுரிக்கும்
பேப்பர்களே அவள் தன் முலைகளைப் பெருப்பிக்க பணம் கொடுப்பதாக
தேசியவாதிகள் சொல்கின்றனர்.

அவள் எதேச்சையாக நிர்வாணமாவது போல போஸ்கொடுக்கவும்
லட்சக்கணக்கில் பணம்வாங்குவதாக
ஒழுக்கவாதிகள் சொல்கிறார்கள்

handjob எனப்படுகிற கைவேலையும்
கணவனை விடவும் அவளுடைய காதலன்
பலசாலி என்பதாலுமே
அவள் தனது முலைகளை அதே தரத்தில்
பேண முடிவதாக
மேல் தட்டு சஞ்சிகைகள் (top shelve megazines)
கட்டுரைகள் எழுதுகின்றன.


ஆக மொத்தத்தில்
அறிய ஆர்வப்படும் மர்மமாயிருக்கிற ஜோர்டானின்
ஊதிப் பெருத்த முலைகளை
எல்லாப் பேப்பர்களிலும்
எல்லாத் தரப்பு மக்களும்
அன்றாடம் பார்க்கிறார்கள்.
இந்த பிரித்தானியாவில்.

0 கருத்துக்கள்: