Sunday, February 10, 2008

அவள் விபச்சாரி எனப்படுகிறாள்

இரவு மிகவும் குளிர்ந்து போயிருந்ததில்
ஒதுங்குவதில் அவையிரண்டும்
அவசரப்பட்டிருக்க வேண்டும்.

அவள் மிகவும் கலைந்தும்
அவன் மிகவும் களைத்தும்
காணப்பட்டதிலிருந்து
ஊகிக்க முடிந்தது இதை...

காலை வேகமாக பனிக்குளிப்பு முடிந்து
சூரியனை உடுத்தத் தொடங்கும் போதே
அவை தம்மை விடுவித்துக் கொண்டன

"மேக அதி நே
தவ சீயக் தென்ட" என்பதே
புணர்வின் இறுதியின் பின் அவள்
தொடங்கிய முனகலாயிருந்தது

ஒன்றுமே தெரியாதது போல
ஒன்றுமே நடவாதது போல
சிங்களமே தெரியாதது போல
அவன் நடந்து போனான்

"கெரி வேசிகே புதா
ரேயட ஒயா என்ட
மங் பலாகன்னம்"
என்ற படி

நேற்றுக் குளித்த பின்
எடுத்து வைத்த
சிரிப்பை உதட்டிலிருந்தும்
பூவைத்தலையிலிருந்தும்
களற்றி வைத்து விட்டு
பொதுக்கிணற்றுப்பக்கம் போனாள்

இரவைக்கு முன்பதாக
மீண்டும்
தொற்றுநீக்கிக் கொள்ளவென..

3 கருத்துக்கள்:

farzan.ar said...

நகர வாழ்வின் இராக்களில் வீ்தீயோரத்தில் அதிகமாய் காணக்கிடைத்த சில்லறைவியாபாரம் இதுதானே...

அசரீரி.. நேற்றுக் குளித்த பின் எடுத்து வைத்த சிரிப்பை உதட்டிலிருந்தும்..
இவ்வரிகள் வாழ்வின் சேதி சொல்கின்றன.

Anonymous said...

அடே ஏன்டா இப்படி வழிசெல் வழிசெலா எழுதுறாய்...
வழிசெலுக்கு எந்த 'ழி/லி/ளி' னா வரும் தமிழறிழஞா..?

அசரீரி said...

நாம் எல்லோருமே வழிசல்கள் தானே பைரூஸ்
(பெயரைச் சொன்னதற்கு மன்னிச்சுக்கடா கருத்தாடலும் அதன் பன்முகத்தன்மையும் Anonymousகளை நண்பர்களாகத்தான் ஆக்க வேண்டுமொழிய நண்பர்களை Anonymous ஆக்குவதில் நான் உடன்படவில்லை..
அதான் பெயரைக் குறிப்பிட்டேன்)

ஒரு தரம் நண்பர் பர்ஸான் உரையாடிக்கொண்டிருக்கும் போது சக்கரவர்த்தியின் கருத்தொன்றைச் சொன்னார்

"நமது மொழிக்குள் வாழும் விரசம் கலந்த மொழியே மொழி" என்று

அது உண்மைதான்
விரசத்தை விரசத்துக்காகப் பேசாத போது அது மொழியை வலிமைப்படுத்தும்தானே..

நமது கண்ணாடி வழிசல் என்கின்ற மொழிப் போர்வையை மட்டுமே காட்டும் போது நாம் அதைக் கழற்றிவிட்டு மொழியை வாசிப்பதும் அதனூடான அரசியலைப் பேசுவதும்தானே நமது மொழியின் அரசியலை சீரானதாக இயங்கச் செய்யும்.
அது நமக்குள் பெரும் அதிகாரங்களை நீக்கம் செய்யும் அல்லவா!!

அதல்லாது மொழி மீதான பகுப்பாய்வை செய்வது வெறும் மேதாவித்தனமாகத்தானே அமையும், அதில் நமது உரையாடலின் உயிர்ப்பும் செத்துப் போகுமே...