தேர்தல் பிரார்த்தனை

ஆண்டவனே!

இரத்தம் சிந்தப்படாத,
உயிர்கள் வதைக்கப்படாத,
வன்முறை நடக்காத,
உள்ளங்கள் துன்பப்படாத நாளாக இந்த நாளைக் காப்பாற்றிக் கடத்திவிடு.

ஜனாதிபதியாக எவன் வந்தாலும்,
எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும்
எங்களுடைய வாழ்வுக்கும் புன்னகைக்கும் உன்னை மட்டும்தான் நம்பியிருக்கிறோம்.

மக்களாகிய எங்களை ஏமாற்றுகிறவன்,
கொள்கை சிந்தனை என்று பொய்களை சொல்லி
எங்களுடைய நேரத்தைத் தின்றவன்,
எங்களின் உரிமைகளை விற்றுக் குடும்பம் நடத்தியவன்,
இந்த நாட்டை வன்முறைகளால் சீரழித்தவன்,
எங்களை உணர்ச்சி ஊட்டி பேரம் பேசி விற்றவன் என எல்லா அழிச்சாட்டியக்காரர்களும் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிற நாளாக இன்றைய நாள் இருக்கிறது கடவுளே......
உன்னைக் கொண்டு மட்டுமே
இந்நாட்டு மக்களாகிய நாம் காப்பாற்றப்பட முடியும்.

வன்முறைக
ளை விட்டும் அரசியலை விட்டும் எங்களையும் புன்னகைகளையும் காப்பாற்றுவாயாக....